 |
யாழ்ப்பாண மாவட்டத்தில்
அக்காலத்தில் கிறீஸ்தவ மதப்பாடசாலைகளும் இந்துமதப் பாடசாலைகளும்
தனியார் நிறுவனங்களால் பராமரிக்கப்பட்டு வந்தன. கிறீஸ்தவ
மதப்பாடசாலைகளுக்கு மத ரீதியாக பல வெளிநாடுகள் உதவி வந்தன.
இலங்கையின் அரச நிர்வாகத்தையும் அவர்களே ஆட்சிக்குட்படுத்தி
இருந்தனர். இதனைக்கண்ணுற்ற தமிழ்க் கல்விமான்களான ஆறுமுகநாவலர்,
முத்துக்குமாரு சிதம்பரப்பிள்ளை,அப்புக்காத்து நாகலிங்கம், சேர்
பொன்.இராமநாதன் சுப்பிரமணியம் இராசரத்தினம் (இந்துபோட்) ஆகியோர்
இந்து தமிழ்ப் பாடசாலைகளை ஆரம்பித்து சைவமும் தமிழும் வளரச்
செயற்படலாயினர்.
>>> |